திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு…!

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் இடைவெளி விட்டு அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 5 பேர் பலி…!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரி ஆம்னி வேன் மோதிய விபத்து : 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர்; மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி , மாணிக்கராஜ். இவர்கள் சகோதரர்கள். இருவரும் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தனர். கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தனர். அதன்பிறகு  சகோதரர் மாணிக்கராஜ் மற்றும் அவரது  … Read more