தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி!

தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி. இன்று தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்தது.  அதன்படி, கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசு, தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள … Read more

12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள்! பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முயற்சி!

12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக   பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. தமிழக … Read more

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றால் கல்வி நிறுவனங்கள்  அனைத்துமே மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் … Read more

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா? தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா ? என மத்திய, … Read more

புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு அலுவலகங்களுடன் கூடிய கட்டடத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104 கோடியும், திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.109 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி பணியிட மாற்றம். சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன், மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த  மாற்றத்தில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலாக்க ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி … Read more

வாகன உரிமங்களை புதுப்பித்தல்! கால அவகாசம் கொடுத்த தமிழக அரசு!

ஆம்னி பேருந்து முதல், மேக்சி கேப் சரக்கு வாகனம் வரை வாடகை வாகனங்களின் வரியை செலுத்த கூடுதல் அவகாசம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், கடந்த இரண்டு மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், வாகன பதிவை புதுப்பித்தல், சாலை வரிகளை செலுத்துதல் ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, வாகனங்களை புதுப்பிக்க முடியாமல் தவித்த வாடகை வாகன உரிமையாளர்கள், அதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த பிப்ரவரியில் … Read more

மருந்து தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்காக பறவைகள் வாழ்விடப்பகுதியை சுருக்குவதா? வைகோ புகார்!

5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா?  தமிழக அரசு மருந்து தொழிற்சாலை விரிவாக பணிகளுக்காக  தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம்  5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது.  இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக … Read more

எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜு

எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது அமைச்சர் செல்லூர் ராஜு  தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள்  திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா … Read more

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும் – தமிழக அரசு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில், தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நலவாரியத்தில், உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக உள்ள அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  இதனையடுத்து, தென்னிந்திய நடிகர் … Read more