12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள்! பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முயற்சி!

12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக   பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், மேலும் 14 தனியார் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் வீடியோ வடிவில் வழங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டியோ தயார் செய்யப்பட்டு பாடங்கள் வீடியோ வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோக்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று முதல், 12-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி வீடியோவை பதிவிறக்கம் செய்து அளிக்க உள்ளனர்.