Wow:ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் ஆக்ஸிஜன் அளவை அளவிடலாம்- ஆராய்ச்சியாளர்கள்

ஸ்மார்ட்ஃபோன் கேமரா மூலம் உங்களது ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸ்மார்ட்ஃபோன்களின் வளர்ச்சி தற்போது, அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வெறும், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது என்று இல்லாமல் உள்ளங்கையில் உலகத்தையே கொண்டு வந்திருக்கிறது இந்த ஸ்மார்ட்ஃபோன்கள். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியாகோவின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் ஃபிளாஷ் ஆல், இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர். … Read more