கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கல.. மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த மணமகன்கள்.!

பெண் சிசு கொலைகளை தடுக்க வேண்டும். இதனால் இப்பொது எங்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். காலங்கள் மாறி, நவீன உலகம் நம் கையில் தவழ்ந்தாலும், இன்னும் சில பழமையான கொடூர சம்பவங்கள் போதிய விழிப்புணர்வின்றி தொடர்ந்து கொண்டு இருப்பது தான் இங்கு சோகமான ஒன்று. அப்படி நடைபெற்ற கொடூரம் தான் பெண் சிசு கொலை. இதன் காரணமாக தற்போது ஆண்கள் தங்களுக்கு சரியான துணை கிடைக்காமல் திண்டாடி … Read more

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை! இரு மாநில முதல்வர்கள் அமித் ஷா சந்திப்பு.!

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் அமித் ஷா டெல்லியில் சந்திப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான பெலகாவி எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் விவாதித்தார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று நடைபெற்ற சந்திப்பு நேர்மறையான அணுகுமுறையில் நடைபெற்றது. இந்த எல்லைப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து … Read more

48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து! 2 பேர் உயிரிழப்பு! பலர் காயம்..

சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நேற்றிரவு இரவு 48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 16 மற்றும் 17 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை … Read more

மஹாராஷ்டிராவில் நடந்த விபத்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையிலிருந்து அஹமதாபாத் செல்லும் வழியில் டிரக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் கடந்த டிச-2 அன்று திருமணத்திற்கு சென்றுவிட்டு தனது குடும்பத்துடன் மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கிராமப்பகுதியான தானிவாரி வழியே செல்லும்போது கார் அவர்களது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் மீது மோதியதில், காரிலிருந்த 80 வயது முதியவர் உட்பட … Read more

Maharashtra:ரயில் மேம்பால நடைமேடை ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 1 பேர் பலி, 12 பேர் காயம்

மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 12 பேர் காயமடைந்தனர். புனே நோக்கிச் செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக ஏராளமான பயணிகள் மேம்பால நடைமேடையை  பயன்படுத்திய போது  அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தநேரத்தில் ரயில் மேம்பால  நடைமேடையின் கீழே நடந்து சென்ற பயணிகள் மீது ஸ்லாப் விழுந்ததில் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை.. மீறினால் 200 அபராதம்!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற கிராமத்தில், போதைப் பழக்கத்தை காரணம் காட்டி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 11ம் தேதி கிராம சபையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் அதிகப்படியான … Read more

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இடைத்தேர்தல் சின்னம் இரட்டை வாள் கேடயம்.! தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு.!

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு இரட்டை வாள் மற்றும் கேடயம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.    மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட இரண்டாக பிறந்த சிவசேனா கட்சியின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் சிவசேனா கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டனர். இதனை தொடர்ந்து கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை முடக்கியது. … Read more

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் பலி, 38 பேர் காயம்! – நிதியுதவி அறிவித்தார் பிரதமர்!

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் டீசல் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்து விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் பேருந்தில் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்தவர்கள். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் … Read more

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 7 வயது சிறுவன் பரிதாப பலி..

மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிள்ளதாக மாணிக்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து கடந்த மாதம் … Read more

சரிவில் கவிழ்ந்த பள்ளி வாகனம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்.. நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ பதிவு..

மகாராஷ்டிராவின் அம்பர்நாத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வைரலாகும் வீடியோ.! மும்பை, அம்பர்நாத் ரோட்டரி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினி பள்ளி பேருந்து, கிரீன் சிட்டி வளாகத்தில் திங்கட்கிழமை(செப் 26) காலை 6.50 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அப்பகுதி மக்களும், சுற்றியிருந்தவர்களும் விரைந்து செயல்பட்டு, கவிழ்ந்த பேருந்தில் இருந்து குழந்தைகளை மீட்டதால், பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். பள்ளி பேருந்து ஓட்டுநர் வளைவில் பேருந்தை … Read more