கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கல.. மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த மணமகன்கள்.!

பெண் சிசு கொலைகளை தடுக்க வேண்டும். இதனால் இப்பொது எங்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

காலங்கள் மாறி, நவீன உலகம் நம் கையில் தவழ்ந்தாலும், இன்னும் சில பழமையான கொடூர சம்பவங்கள் போதிய விழிப்புணர்வின்றி தொடர்ந்து கொண்டு இருப்பது தான் இங்கு சோகமான ஒன்று.

அப்படி நடைபெற்ற கொடூரம் தான் பெண் சிசு கொலை. இதன் காரணமாக தற்போது ஆண்கள் தங்களுக்கு சரியான துணை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

 மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் மாப்பிள்ளை போல அலங்கரித்து கொண்டு பேரணியாக மாவட்ட கலெக்டரிடம் சென்று திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என மனு கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் முக்கியமாக குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் , அந்த பகுதியில் கருவுற்ற பெண்ணின் வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என சட்டவிரோதமாக  குழந்தையின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெண் சிசு கொலையால்  தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் மட்டுமே உள்ளனர் என்பது நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment