லேடி சூப்பர்ஸ்டாருடன் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி – வைரல் புகைப்படம் உள்ளே!

லேடி சூப்பர்ஸ்டாருடன் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி இணைந்து எடுத்த புகைப்படம் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடராகிய பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் ரோஷினி பிரியா. அண்மையில் இந்த தொடர் மிகவும் பிரபலமாகியது. அதற்கு காரணம் கண்ணம்மாவாக நடிக்க கூடிய ரோஷனி கர்ப்பிணியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறியதை வைத்து பல ட்ரோல்கள், மீம்ஸ்கள் இணையதளத்தில் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தற்போது ரோஷினி பிரியா, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Exit mobile version