அமேதி தொகுதி : வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம்  வயநாடு தொகுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வயநாடு … Read more

பாஜக தேர்தல் அறிக்கை பூட்டிய ஒரு அறைக்குள், ஒரு மனிதரின் எண்ணப்படி தயாரிக்கப்பட்டது-ராகுல் காந்தி

பாஜக தேர்தல் அறிக்கை பூட்டிய ஒரு அறைக்குள், ஒரு மனிதரின் எண்ணப்படி தயாரிக்கப்பட்டது என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் … Read more

வயநாடு மக்களவை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேர்தலையொட்டி  காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,கேரள காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று, கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று ஏ.கே.அந்தோணி கூறினார்.இதனால் … Read more

பிரதமர் என்னை கண்டு பயப்புடுகிறார் ராகுல்காந்தி ஆக்ரோஷம்

மக்களைவையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது இதில் விவாதம் நடைபெற்றுவருகிறது  இது குறித்து ராகுல்காந்தி தெரிவிக்கையில் ,பிரதமர் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்னை பார்க்க தவிர்க்கிறார் அவர் 15 லட்சம் மற்றும் 2 கோடி வேலைவாய்ப்பு  தருவதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிட்டார் .இது மட்டுமில்லை பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார் . மேலும் அவர் அமித்ஷா மகன் பற்றி பேசும் போது   பாஜக உறுப்பினர்கள் கடும் … Read more

எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதே மக்களின் விருப்பம் ராகுல் காந்தி தகவல்..!

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் மோடியை எதிர்க்க எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார். மராட்டியத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:– பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் அரசியல் … Read more

அத்வானிக்கு மோடியை விட காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்துள்ளது – ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அனைத்து தரப்பு மக்களை மும்பை நகரம் உள்வாங்கி கொண்டு செயல்படுவதுபோல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வருவதாக ராகுல் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஒரு மூத்த அரசியல்வாதி, இந்த நாட்டை பாதுகாக்க காங்கிரசால்தான் முடியும் என 50 ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்துள்ளதாக … Read more

ராகுல் காந்தி மும்பை வருகை.! வரவேற்க 1000 ஆட்டோக்கள் காத்திருப்பு..!

அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக வரும் செவ்வாய் கிழமை மும்பைக்கு பயணம் செய்யும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் கட்சியின் பூத் மட்டத்திலான நிர்வாகிகள் முன்னிலையில்  உரையாற்ற உள்ளார். இந்நிலையில், மும்பை வரும் ராகுல் காந்தியை வரவேற்க 1000 ஆட்டோ ஓட்டுனர்கள் முடிவு செய்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்ஜய் நிரூபன் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ராகுல் காந்தி சாதாரண … Read more

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பிரிவு ?எம்.எல்.ஏ.க்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு..!

கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள குமாரசாமி மந்திரிசபை கடந்த 6-ந்தேதி விஸ்தரிக்கப்பட்டது. அதில், மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த முன்னாள் மந்திரியும், லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரிக்க குரல் கொடுத்தவருமான எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆதரவாக 15 முதல் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், கர்நாடக காங்கிரஸ் … Read more

டெல்லியில் வருகிற 13-ம் தேதி இஸ்லாமியர்களுக்கு ராகுல் காந்தி இப்தார் விருந்து..!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆண்டுதோறும் ரமலான் நோன்பு மாதத்தில் ‘இப்தார்’ எனப்படும் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த விருந்துகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆனால், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் … Read more

நீட் தேர்வு: தற்கொலை செய்த பிரதீபாவின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல்..!

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி கடந்த 3-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் … Read more