மத்திய பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

மத்திய பிரதேசம் சட்டப் பேரவையில் நாளை முதல்வர் கமல்நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது வீடியோ பதிவு செய்யவும், வாக்கெடுப்பில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கெடுக்க விரும்பினால் கர்நாடக டி.ஜி.பி மற்றும் மத்திய பிரதேசம் டி.ஜி.பி பாதுகாப்பளிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்ந்து கமல்நாத் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு ராஜினாமா செய்வதாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்தனர். இதனால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து கமல்நாத் அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் சபாநாயகர் சட்டசபையை கூட்டவில்லை. இந்த நிலையில் நாளை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்