சிம்பு ரசிகர்களுக்கு நாளை சூப்பர் அப்டேட்.?

சிம்புவின் 48-வது படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாண் பிரியதர்ஷன் நடித்துள்ளார். அரசியலை மையமாக வைத்து இந்த திரைப்பட எடுக்கப்பட்டுள்ளது.

Maanadu 2

இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

VenthuThaninthathuKaadu

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்  அறிவித்துள்ளது. இதன் மூலம் சிம்புவின் அடுத்த படத்தையும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்  தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.