Sunday Special : தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்முறை..!

சப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்

வெங்காயம் நறுக்கியது – 1 கப்

தக்காளி நறுக்கியது – 1/2 கப்

பச்சை மிளகாய் – 2

பட்டை கிராம்பு -சிறிதளவு

பிரிஞ்சி இலை – 2

தேங்காய் பால் – அரை கப்

சிக்கன் மசாலா – 3 ஸ்பூன்

தனியா தூள் – 2 ஸ்பூன்

மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

Related imageசெய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை, தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு வதங்கியவுடன் அதோடு சிக்கன் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்றாக வங்கியவுடன் சிக்கன் துண்டுகளை தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய்ப்பால்  சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.  Image result for தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி
author avatar
Dinasuvadu desk

Leave a Comment