இன்று முதல் 10 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு..! எங்கு தெரியுமா…?

காஷ்மீரில் வெயில் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்வரை பள்ளிகளுக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு. 

கோடை காலம் முடிவடைந்துள்ள நிலையிலும் பெரும்பாலான மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக  காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் தாமதமாக தான் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் சற்று தணிந்து ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் காணப்படுகிறது.

இந்த நிலையில், காஷ்மீரில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாமல் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வெயில் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்வரை இன்று முதல் 10 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.