கோடைகால குறிப்புகள்..! உங்க வீடு குளுகுளுன்னு இருக்க இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

Summer tips-கோடை காலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வீட்டுக்குளே  இருந்தாலும் அதன் வெட்கை  நம்மை சுட்டெரிக்கிறது . இந்த வெட்கையை  குறைத்து வீடை குளு குளு என மாற்றும் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம்.

1.மழைக்காலங்களில் நாம் துணிகளை துவைத்து வீட்டுக்குள் தான் காய வைப்போம், அதேபோல் கோடை காலத்திலும் செய்தால் வீடும் குளுமையாக  இருக்கும் துணிகளும் காய்ந்து விடும்.

2.மதிய வேலைகளில் ஜன்னலில் இருந்து வரும் காற்று மிக சூடானதாக இருக்கும் இதனைக் குறைக்க வீட்டில் இருக்கும் காட்டன் துணி அல்லது போர்வையை நனைத்து ஜன்னலில் ஸ்கிரீனாக  பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் காற்று ஜில்லென்று இருக்கும்.

3.மொட்டை மாடிகளில் நூல் சாக்குகளை விரித்து அதிலே தண்ணீர் ஊற்றி விட்டால் அந்த சாக்கின் ஈரம் இருக்கும் வரை அதற்கு கீழ் உள்ள அரை குளுமையாக இருக்கும்.

4.ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும், இரவில் அதை நம் அறைக்குள் வைத்துவிட்டு ஃபேன் போட்டால் காற்று அதில்  பட்டு நமக்கு குளுமையான காற்றைத் தரும். டேபிள் பேன் ஆக இருந்தால் அந்த ஃபேன் முன்பு ஐஸ் கட்டிகளை வைக்கவும்.

5.நம் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே லைட்டுகளை ஆப் செய்து விட வேண்டும், ஏனென்றால் அதிலிருந்து வெளியாகும் வெப்பமும் அறையை சூடாக்கும். மேலும் ஜீரோ வாட்ஸ் பல்புகள், ட்யூப் லைட்டுகளை பயன்படுத்துவதை கோடை  காலங்களில் குறைத்துக் கொள்ளலாம் ,அதற்கு பதில் எல் இ டி பல்பு வகைகளை பயன்படுத்தலாம்.

6.ஒரே நேரத்தில் இரண்டு பேன்களை போடுவதை தவிர்க்கவும் .இந்த கோடை காலத்தில் காற்று பத்தாமல் இரண்டு பேன்களை போடுவோம் அவ்வாறு செய்தால் வீட்டில் உள்ள சூடு வீட்டுக்குள்ளேயே சுற்றி கொண்டு இருக்கும், இதை தவிர்க்கவும். அதற்குப் பதில் ஒரு பேன் போட்டு 20 நிமிடம் கழித்து மற்றொரு பேனை போட்டுக் கொள்ளலாம்.

7.கருப்பு நிற ஆடைகளையும், பொருள்களையும் வீட்டில் பயன்படுத்துவதை கோடை காலத்தில் தவிர்த்துக் கொள்வது நல்லது, ஏனென்றால் கருப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கி வெளிவிடும்.

8.நம் படுக்கும் அறைக்குள் நிறைய பொருள்களை அடைத்து வைப்பது அகற்றவும். இவ்வாறு நிறைய பொருட்கள் இருக்கும்போது அறையில் வெப்பத்தை அதிகரிக்க செய்யும், அதனால் தேவையில்லாத பொருட்களை நீக்கி விடுவது நல்லது.

வீட்டை குளுகுளுவென வைத்திருக்க ஏர் கூலர், ஏசி என பல பொருட்கள் வந்துவிட்டாலும் அதை அனைவராலும் வாங்க முடியாது .அதற்கு பதிலாக செலவே இல்லாமல் இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.