எந்த மதத்திற்கும் எதிரான படம் “சுல்தான்” இல்லை – பாக்யராஜ் கண்ணன்..!

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் சுல்தான் எந்த மதத்திற்கும் எதிரான படம் இல்லை அது வெறும் தலைப்பு மட்டுமே. 100 அண்ணன்களுக்கும் 1 தம்பிக்குமான கதைதான் இந்த படம் என்று கூறியுள்ளார். 

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த 1 ஆம் தேதி வெளியானது அதனை தொடர்ந்து இன்று இந்த படத்திற்கான முதல் பாடலை இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியீடவுள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கான டிரைலரை விரைவில் வெளியீட படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் சில இந்து மத அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தார்கள். சுல்தான் என்று படத்திற்கு தலைப்பு வைத்ததால் மலைக் கோட்டை பகுதியில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, “எந்த மதத்திற்கும் எதிரான படம் சுல்தான் இல்லை இது வெறும் தலைப்பு மட்டுமே. 100 அண்ணன்களுக்கும் 1 தம்பிக்குமான கதைதான். என்றும் கூறியுள்ளார். காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன், போன்றவை கொண்ட முழு ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.