நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து.!

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு வழக்கமாக செல்லும். அப்போது பெல்ட் செல்லும் பாதையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர் தீயானது கன்வேயர் பெல்ட்டில் சுமார் 100 மீட்டர் அளவிற்க்கு பரவியுள்ளது. இதையடுத்து என்.எல்சி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விரைவாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்