மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் என  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

டெல்லியில், மின்சார வாகன விழிப்புணர்வு குறித்த பரப்புரை இயக்கத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்தார். அதன் பின்  பேசிய அவர், மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும்  இறக்குமதி செய்யப்பட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கான செலவை விட, மின்சாரம் மூலம் செய்யப்படும் சமையலுக்கு செலவு குறைவாக தான் இருக்கும்.

சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அரசு துறைகள் ஆணானதும் மின்சார வாகனங்களை பயன்படுத்த துவங்க வேண்டும் என்றும், இதற்க்கு வழிகாட்டும் வகையில், தமது சாலை போக்குவரத்து துறை மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.