இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 10-ம் தேதி தொடக்கம்.?

பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆன்லைன் வழியே பதிவு செய்ய வருகின்ற  ஜூன் 10-ம் தேதியில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், நடைபெறாமல் இருந்த 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்தார்.

மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தற்போது, கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கல்லூரிகளில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் 1,72,148  அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. பொறியியல் படிப்புக்கான  கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்  உள்ளதாக நேற்று கே.பி. அன்பழகன் கூறினார்.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆன்லைன் வழியே பதிவு செய்ய வருகின்ற  ஜூன் 10-ம் தேதியில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

 

author avatar
Dinasuvadu desk