வலிமையை முந்திய டாக்டர் டிரைலர்.! கொண்டாடும் SK -ரசிகர்கள்.!

வலிமை Glimpse வீடியோவை முந்திய டாக்டர் டிரைலர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்தி கேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்கின்றார்கள்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம் .

இந்த டிரைலர் யூடியூபில் 3.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில், டாக்டர் டிரைலர் வலிமை படத்தின் Glimpse வீடியோவை யூடியூபில் முந்தியுள்ளது.

DoctorTrailer 5

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் Glimpse வீடியோ வெளியிடபட்டது. தற்போது யூடியூபில் 8 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் 1 நம்பர் டிரேன்டிங்கில் இருந்தது.

இதனிடையே நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரைலர்   யூடியூப்பில் வலிமை படத்தை முந்தி கொண்டு ட்ரெண்டிங் No.1-ல் இருந்து வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.