திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துகிறேன்! ‘பிரேமம்’ இயக்குனர் அதிர்ச்சி அறிவிப்பு!

பிரேம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. மலையாள மொழியில் வெளியான இந்த திரைப்படம் அந்த மொழியிகளில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி கன்னடம் என எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில், தற்போது தான் இனிமேல் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருடைய இந்த திடீர் அறிவிப்புக்கு காரணம் அவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறாம்.

இதனை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்து இருக்கிறார். இது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது ” நான் என்னுடைய சினிமா பயணத்தை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்  இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் எனக்கு நேற்று தான் தெரியவந்தது.

எனவே, இதன் காரணமாக தியேட்டருக்கான என்னுடைய சினிமாவின் பயணத்தை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த மாதிரி நேரத்தில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே, இதன் காரணமாக நான் இனிமேல் வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் ஓடிடியில் இயக்குவேன்” என அறிவித்துள்ளார்.  ஆனால், அறிவித்த பிறகு அவருடைய பதிவு வைரலாக நிலையில் உடனடியாக அந்த பதிவையும் அவர் நீக்கி விட்டார்.

இருப்பினும், இவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால்ம, பிரேமம் எனும் மிக்பெரிய ஹிட் படத்தை கொடுத்த அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக அதே போலவே ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த சூழலில் இனிமேல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை இயக்கமாட்டேன் என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கடைசியாக நடிகை நயன்தாரா, நடிகர் பிரித்திவ் ராஜ் ஆகியோரை வைத்து கோல்டு எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.