தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்தவர் எம்ஜிஆர்.! பசும்பொன்னில் இபிஎஸ் பேட்டி.! 

இன்று அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டும் இந்த நிகழ்வு , முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலலே அரசியல் தலைவர்கள் நேரில் வந்து தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வந்து நேரடியாக மரியாதை செலுத்திய பின்னர், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன்: தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக பார்த்தவர் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை பேட்டி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தனது வாழ்நாள் முழுவதும் தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக மதித்து செயல்பட்ட தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர். ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரு தேர்தலிலும் வெற்றி பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு படைத்தவர்.

தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்தவர் அப்போதைய  தமிழக முதல்வர் எம்ஜிஆர். தேவர் புகைப்படத்தை சட்டமன்றத்தில் அதிமுக தான் திறந்து வைத்தது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த சமயத்தில், 13.5 கிலோ தங்கம் கவசத்தை அளித்தார். நந்தனத்தில் முத்துராமலிங்க தேவர் முழு உருவ சிலையானது அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டது.

அவர் தேசத்திற்காக வாழ்ந்த மாபெரும் தலைவர். அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக மேற்குறிப்பிட்ட திட்டங்களை அதிமுக செயல்படுத்தியது. அவர் பிறந்த இந்த ஊர் தெய்வீக பூமி. பசும்பொன்னில் தேவர் நினைவாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. தெய்வீக திருமகனாரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தியுள்ளோம். இந்த பொன்னான நாளில் இங்கே அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என கூறிவிட்டு சென்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.