Stock market: சூடு பிடித்த சென்செக்ஸ்.. 160 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

சென்செக்ஸ் பங்குசந்தையில் இன்று 162.69 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இன்றைய சென்செக்ஸ் 162.69 புள்ளிகள் உயர்ந்து 38,097.42-ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி,57.50 புள்ளிகள் உயர்ந்து 11,189.30 ஆக உயர்ந்தது.

சென்செக்ஸ் உயர்வு, சரிவு:

சென்செக்ஸ் பங்குசந்தை உயர்வில் அதிகபடியாக டெக் மகிந்த்ரா பங்கு விலை 3.31% உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகேந்திரா நிறுவனம் 3.11%, மாருதி சுஸுகி 2.05%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.95%, பஜாஜ் ஆட்டோ 1.78%, பஜாஜ் பைனான்ஸ் 1.59%, பஜாஜ் ஃபின்செர்வ் 1.47%, டிசிஎஸ் 1.24%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.01%, டாடா ஸ்டீல் 1.01% உயர்வை கண்டுள்ளது.

சரிவில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் 0.88% சரிந்துள்ளது. அடுத்தபடியாக பரவ் கிரிட் 0.52%, டைடன் 0.31%, ஏசியன் பெயிண்ட்ஸ் 0.25%, எண்டிபிசி 0.23%, ஓஎன்ஜிசி 0.19%, இன்ஃபோசிஸ் 0.18% சரிந்துள்ளது.

நிஃப்டி உயர்வு, சரிவு:

நிஃப்டி பங்குசந்தையில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 3.34% உயர்ந்துள்ளது. அதற்கடுத்தபடியாக, டெக் மகிந்த்ரா நிறுவனம் 2.63%, மகிந்த்ரா 2.61%, பாரத் பெட்ரோலியம் 2.34%, ஹிண்டால்கோ 2.21%, இண்டஸ் இண்ட் பேங்க் 2.19%, ஹீரோ மோட்டோகார்ப் 2.12% உயர்வை கண்டுள்ளது.

சரிவில் அதிகபட்சமாக, பார்தி இன்ஃப்ராடெல் 2.42% சரிந்துள்ளது. மேலும் அதற்கடுத்தபடியாக. ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் 1.69%, கிரசிம் 0.65%, டைடன் 0.57%, இன்ஃபோசிஸ் 0.47%, ஓஎன்ஜிசி 0.47%, பவர் கிரிட் 0.41%, எண்டிபிசி 0.34%, எல்&டி 0.33% சரிவை கண்டுள்ளது.

மேலும், டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு இன்று ரூ.0.03 உயர்ந்து ரூ.74.85 ஆக உள்ளது.