அரசியல் ஆதாயத்திற்காக குற்றச்சாட்டும் ஸ்டாலின் – அமைச்சர் காமராஜ் பளிச் பேட்டி.!

ஸ்டாலின் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது – அமைச்சர் காமராஜ்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை பேசப்படக்கூடிய வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக குழுக்கள் அமைத்து துறைரீதியான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை முறையாக செயல்படுத்தி வருகிறது என்றும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூ.438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வாங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் பெறப்பட்ட 98 ஆயிரம் மனுக்களில் போக்குவரத்து வசதி குறித்து இடம் பெறவில்லை. அரசின் மீது குறைசொல்ல வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட மனுக்கள், ஸ்டாலின் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது என்று குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்