தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!

சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், 29-ஆம் தேதி நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் ரகுபதி

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, நான்கு மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி மீன்பிடி உபகரணங்கள், வலைகளையும் அபகரித்து சென்றுள்ளனர். காயமடைந்த இரண்டு மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.