தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து மீன், வலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவை பறிப்பு.

மீனவர்கள் மீது தாக்குதல்:

attacksrilankannavy

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து மீன், வலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

மீனவர்கள் குற்றசாட்டு:

meenavrgal

படகில் இருந்த தங்களை கடலில் தள்ளிவிட்டு அவர்களை துன்புறுத்தியதாக மீனவர்கள் குற்றசாட்டியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்யவது என இலங்கை கடற்படை வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இதுபோன்று சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் எல்.முருகன் பேட்டி:

L MURUGAN

இதனிடையே, இன்று செய்தியல்ல ரசந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதை தடுக்க இலங்கை அதிபர், மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன். ஏப்ரல் மாதம் இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment