சிங்கப்பூர் – இந்தியா இடையே ஜூன் 9 முதல் சிறப்பு விமானம்.!

15 சிறப்பு விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு ஜூன் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 15 சிறப்பு விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, 4 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததால் உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் உள்நாட்டு விமான சேவை தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டில் கொரோனா மற்றும் ஊரடங்கால் தவித்து வரும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூல அழைத்து வரப்பட்டு வருகிறது. இதற்காக ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு ஜூன் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்