வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக அரசிடம் கொடுக்க வேண்டும்.! வடகொரியாவின் அதிரடி.!

வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

வடகொரிய நாட்டில் வாழும் 25.5 மில்லியன் மக்களில் சுமார் 60 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பாதித்துள்ளனர். இந்த தகவலை அண்மையில் ஐநா வெளியிட்டது.

இதனை கருத்தில் கொண்டு, வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அறிவித்துள்ளார்.  மேலும், வீட்டில் நாய் வளர்ப்பது முதலாளித்துவ மேம்போக்கு நடவடிக்கை எனவும், வடகொரியாவில் வீட்டில் நாய் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.

அதிபரின் உத்தரவை அடுத்து, வீட்டு அதிகாரிகள், நாய் வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்து வளர்ப்பு நாயை கைப்பற்றி விலங்குகள் சரணாலயத்திற்கும், இறைச்சி கூடத்திற்கும் அனுப்பி வருகின்றனராம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.