சீக்கிரமே கொரோனா வைரஸுக்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைண்ட் கண்டுபிடிக்கட்டும் – மாஸ்டர் படக்குழு

இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இந்நிலையில், இப்படம் இம்மாதம் வெளியாகவிருந்த  நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து, ட்வீட்டர் பக்கத்தில் மாஸ்டர் படக்குழு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில், ‘உங்களை போல, நாங்களும் உங்கள் வரவை மிஸ் செய்கிறோம். சீக்கிரமே கொரோனா வைரஸுக்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைண்ட் கண்டுபிடிக்கட்டும். விரைவில் இன்னும் வலிமையுடன் வருகிறோம் நண்பா.’ என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.