நாளை மறுநாள் வரும் சூரிய கிரகணத்தை எந்த ஊர்க்காரர்கள் எல்லாம் தெளிவாக பார்க்கலாம்?!

  • சூரிய கிரகணம் நாளை மறுநாள் காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. 
  • இந்த சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு,  கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் தெளிவாக தெரியும். 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் நாளை மறுநாள் 26ஆம் தேதி காலை 8 மணி முதல் காலை 11.11 வரை 3மணிநேரம் நிகழ உள்ளது. சரியாக சூரிய கிரகணத்தை காலை 9.35 மணிக்கு 2 நிமிடங்கள் நம்மால் பார்க்கமுடியும்.

இந்த சூரிய கிரகண நிகழ்வானது இந்தியா முழுவதும் தெரியவரும். தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு,  கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் தெளிவாக தெரியும்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு வரும் இந்த சூரிய கிரகணத்தை மூட நம்பிக்கையை தவிர்த்து அதற்கென உரிய சூரிய கண்ணாடி போன்ற பொருளை வைத்து பார்க்கலாம். இந்த சூரிய கிரகணம் ஆனது, நிலவு சூரியனை தொடுவது, சூரியனின் விளிம்பு மட்டும் தெரிவது, சூரியனில் இருந்து விலக தொடங்குவது, முழுமையாக சூரியனில் இருந்து விலகுவது, மோட்சம் என ஐந்து படிநிலைகளை கொண்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.