Sleep : நீங்கள் குப்புற படுத்து தூங்குவதால் இந்த பிரச்னைகளெல்லாம் ஏற்படுமா..? வாங்க பார்க்கலாம்..!

நம்மில் பெரும்பாலனவர்களுக்கு குப்புறபடுத்து தூங்கினால் தான் உறக்கமே வரும். இவ்விரு தூங்குவது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குப்புற படுத்து தூங்கும்போது, ​​தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

குப்புற படுத்து தூங்குவதை விரும்புபவர்கள், தங்கள் தலை மற்றும் கழுத்திற்கு ஆதரவாக   ஒரு தலையணையைப் பயன்படுத்தலாம்.  அதிலும் பெண்கள் குப்புற படுத்து தூங்கும் போது மார்பு வலி ஏற்படுகிறது. குப்புற படுக்கும் பொது மார்பகத்தின் மீது  அழுத்தம் ஏற்படுவதால் நெஞ்சுவலி போன்ற பிற நோய்களும் ஏற்படலாம். 

குப்புற படுத்து தூங்குவது முகத்தின் அழகை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், குப்புற படுத்து தூங்குவதால் முகசருமம் போதுமான ஆக்சிசனை பெற முடியாமல் போவதால் சில சரும பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முக்கியமாக கர்ப்பமாக இருப்பவர்கள் குப்புற படுத்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவ்வாறு படுப்பது தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். 

குப்புற படுத்து தூங்குவது, செரிமான மண்டலத்தில்பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அஜீரண கோளாறு ,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே உங்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்றால் , குப்புறபடுப்பதை தவிர்த்திடுங்கள்.

எனவே குப்புற படுத்து தூங்குவதை விட, வலது பக்கமாக அல்லது இடது பக்கமாக படுத்து தூங்குவது சிறந்தது.  இவ்வாறு படுக்கும்போது, ​​முதுகு மற்றும் கழுத்து ஆகியவை நேராக இருக்கும். இது தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு குறைவான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், செரிமானம் மற்றும் சுவாசம் ஆகியவை மேம்படும். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.