சிவகார்த்திகேயனின் அடுத்த பட தகவல்.? 6 – வது முறையாக இணையும் இசையமைப்பாளர்.!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் என்பவரது இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரையரங்குகள் திறந்தவுடன் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிற்றது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவுபெறவுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது, சிவகார்த்திகேயன் அடுத்ததாக அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் என்பவரது இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.