சைரன் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியான சைரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியா இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்திசுரேஷ் , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசையை சாம்.சி.எஸ் இசையமைத்து கொடுத்து இருக்கிறார். படத்தின் ட்ரைலர் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது என்றே சொல்லலாம்.

பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!!

எதிர்பார்த்த அளவிற்கு படமும் இருந்த காரணத்தால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் சுமாரான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் படம் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. இதனையடுத்து, படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்த்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, சைரன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 5.56  கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாளில் 1.40 கோடியும், இரண்டாவது நாளில் 2.08 கோடி எனவும், மூன்றாவது நாளில் 2.08 கோடி என மொத்தமாக 5.56  கோடி வசூல் செய்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment