சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்கள் குடும்பத்திற்க்கு திமுக சார்பில் ஸ்டாலின் நிதியுதவி..

  • சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக சார்பில் நிதியுதவி.
  • சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியில் இருந்த  சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் வாக்குமூலமும் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது, இதில் இறந்த வில்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ரூ.5 லட்சம் ரூபாயை  அவரது மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கப்பட்டது.ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ஒரு கோடிரூபாய் நிதியுதவி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கடந்த  ஜனவரி 8ம்  தேதி புதன் கிழமை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில் கைதான தவுபிக், சமீம் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ளது. இவர்கள் தற்கொலைபடை தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

author avatar
Kaliraj