அரசாங்கங்கள் இப்போது அவற்றைக் குறைக்க வேண்டாமா.? கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின்.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய் 31.02 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல் விலை ரூபாய் 73.33 ஆக இருக்கிறது. மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோ, டீசல் விலையும் குறைவதுதானே நியாயம் என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் பலன்களை இந்திய நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் விரைவாகச் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி விலை குறைப்பு பொருளாதார வளர்ச்சியையும் தூண்டும் என்று குறிப்பிட்டார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது உடனடியாக உயர்த்தும் அரசுகள், இப்போது கடுமையான விலை சரிவின்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டாமா? என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்