எல்லையில் 45 ஆண்டுகளில் முதல் முறையாக துப்பாக்கிச்சூடு.?

லடாக்கில் இந்தியாவிற்கும் ,சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன அரசு குற்றம் சாட்டிய நிலையில், இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதில்,  எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை. சீன இராணுவ வீரர்கள் தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில முறை சுட்டனர் எனவும் நேற்று எல்லையில் சீன படையினர் அத்துமீற முற்பட்டனர் என  இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய- சீன  இடையே எல்லையில் 1975-ம் ஆண்டுக்குப் பிறகு  துப்பாக்கிச் சூடு நடந்தது இதுவே முதல் முறை ஆகும்.

author avatar
murugan