அதிர்ச்சி..! குப்பை தொட்டியில் கிடந்த 5 மாத சிசு..! மருத்துவமனைக்கு சீல்..!

மாண்டியா-மைசூரு-பெங்களூரு ஆகிய பகுதிகளில் பெண் சிசுக்கொலை மோசடி கும்பலை போலீசார் கண்டுபிடித்த நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஹோஸ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் குப்பை தொட்டியில் ஐந்து மாத சிசு கண்டறியப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மூன்று செவிலியர்கள் உட்பட சில ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மருத்துவர் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ‘கேக் நகரம்’ எது தெரியுமா.? 2 வினாடிக்கு 5 பிரியாணிகள் ஆர்டர்.! 

சிசிடிவி காட்சிகள் மூலம் எத்தனை சட்டவிரோத கருக்கலைப்புகள் நடந்துள்ளன என்பதை அறிய மருத்துவமனை பதிவுகளை போலீசார் சரிபார்த்து வருகின்றனர். இதுகுறித்து பிசிபிஎன்டிடியின் துணை இயக்குநர் விவேக் துரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஆய்வின் போது மருத்துவமனை வளாகத்தில் பதிவு செய்யப்படாத போர்ட்டபிள் அல்ட்ராசவுண்ட் இயந்திரத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்குள்ள செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் எங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை.

இதன்காரணமாக மருத்துவமனையை ஆய்வு செய்த போது தான், ஆபரேஷன் தியேட்டரில் கழிவுத் தொட்டியில் 5 மாத காரு இருந்ததை கண்டுபிடித்தோம்.  நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சீல் வைத்து காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.