ஒரு அரை சதத்தில் பல சாதனை படைத்த ஷிம்ரான் ஹெட்மியர்!

நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு .
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டை 286 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மியர் 45 பந்திற்கு  54 ரன்கள் எடுத்தார்.அதில் 8 பவுண்டரி ,1 சிக்ஸர் விளாசினார்.இவர் நேற்று அரைசதம் அடித்ததன் மூலம் பல சாதனைகள் படைத்தார்.

  • ஷிம்ரான் ஹெட்மியர் ஒருநாள் போட்டியில் அடித்த நான்காவது அரை சதம் ஆகும் .
  • அவர் அடித்த 4 அரைசதத்தில் மூன்று அரை சதம் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது அடித்தது.
  • உலக கோப்பையில் இவர் நடித்த இரண்டாவது அரைசதம் ஆகும்.
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அடித்த முதல் சதம் ஆகும்

 
 

author avatar
murugan