பளபளக்கும் பலா பிஞ்சி பொடிமாஸ் செய்வது எப்படி

பலாபழம் பழங்களின் அரசன் என்ற சிறப்பினை உடையது. இது நமது உடலில் ஏற்படும்  பல பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக  அமைகிறது. இது முக்கனிகளில் இரண்டாவது கனியாக விளங்குகிறது.

உடலில் ஏற்படும் பல விதமான நோய்களான  நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணப்படுத்த மிகவும் உதவியாக  இருக்கும். பலாக்காய் உடலுக்கு வலு கொடுக்கும். மேலும் வாத பித்த கபத்தை சீராக வைத்திருக்கும்.உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.இந்த பதிப்பில் பலா பிஞ்சி பொடிமாஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

முக்கியக்குறிப்பு :

பலா பின்ஜி அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும் எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள்

பலா பின்ஜி – இரண்டு கப்

காய்ந்த மிளகாய் – ஒன்று

வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – ஒன்று

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

தண்ணீர் – தேவைகேற்ப

கடுகு – கால் டீஸ்பூன்

உ.பருப்பு – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  நறுக்கிய பலா பிஞ்சு,உப்பு மற்றும் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பலாக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்து  அதை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பத்திரத்தை  அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும்.

அதற்கு பிறகு பலா பின்ஜி பொடித்து வைத்ததை போட்டு நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்க வேண்டும். சுவையான  பளபளக்கும் பலா பின்ஜி பொடிமாஸ் ரெடி.

Leave a Comment