உலகக்கோப்பையில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் ஷாகிப்-அல்-ஹசன்!

நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது.முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.

பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து  200 ரன்கள் மட்டுமே  எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்று ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் ஷாகிப்-அல்-ஹசன் 51 ரன்கள் அடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.இவர் 35 -வது ரன்னை கடக்கும் போது உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணியில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இவர் உலகக்கோப்பையில் 1000 ரன்கள் கடந்த 19 வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.இவர் இதுவரை 27 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி 1016 ரன்கள் குவித்து உள்ளார்.மேலும் இவர் நடப்பு உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 476 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பித்தக்கது.
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 476 ரன்கள் குவித்து நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

author avatar
murugan