தொடர் மிரட்டல்கள்..! Z+ பாதுகாப்பு வேண்டும் – சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆதர் வேண்டுகோள்..!

உயிருக்கு ஆபத்து விளைவிப்பது குறித்து தொடர் மிரட்டல்கள் வருவாதல் இசட் ப்ளஸ்(Z+) பாதுகாப்பு வேண்டும் என்று சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆதர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும்,ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா,தடுப்பூசி விநியோகம் குறித்து தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவாதாக மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,”கொரோனா
தடுப்பூசிக்கான கோவிஷீல்டு மருந்தினை உடனடியாக தயாரித்து தருமாறு மாநில முதல்வர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுகின்றனர்.

இதனால் எனக்கும்,குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இசட் ப்ளஸ்(Z+) பாதுகாப்பு வேண்டும்” என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் தெரிவித்துள்ளார்.

ஆனால்,இதற்கு முன்னரே அச்சுறுத்தல் காரணமாக ஆதர் பூனவல்லாவுக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.