Sunday, June 2, 2024

பாஜக டூ காங்கிரஸ்.! விலகும், விலக்கப்படும் மூத்த தலைவர்கள்.! பாஜகவுக்கு பின்னடைவா.?

லக்ஷ்மன் சவடியை தொடர்ந்து, ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எடியூரப்பா, ஈஸ்வரப்பா ஆகியோர் தேர்தல் அரசியலில் இருந்து விலகல்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சியிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பிலும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால், பல்வேறு அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன.

ஜெகதீஷ் ஷெட்டர் :

தற்போது, பாஜக கட்சியில் முன்னாள் தலைவராகவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் தற்போது பாஜகவில் இருந்து விலகி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார். ஜெகதீஷ் ஷெட்டர் 6 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

வாய்ப்பு இல்லை :

அண்மையில் பாஜக தனது கட்சி சார்பாக வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 50க்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பாஜக முக்கிய பிரமுகர்களுக்கு சீட் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் அவர்கள் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர். சிலர் காங்கிரஸிலும் இணைந்து வருகின்றனர். பாஜக சார்பாக போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

காங்கிரஸில் ஜெகதீஷ் ஷெட்டர் :

அந்த வகையில், தற்போது, பாஜகவில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டர் விலகி, காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.செல்வகுமார், சித்தராமையா தலைமயில், பாஜகவில் இணைந்தார். இதுபற்றி, டி.கே.செல்வகுமார் கூறுகையில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் வைக்கமாட்டார். நாங்கள் எந்த பொறுப்பும் வழங்க போவதில்லை, கட்சியின் கொள்கைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும். என குறிப்பிட்டு இருந்தார்.

லக்ஷ்மன் சவடி :

அதே போல, கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் அத்தானி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மன் சவடி அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். லக்ஷ்மன் சவடி , பாஜக துணை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது,

காங்கிரசில் லக்ஷ்மன் சவடி :

இதனை தொடர்ந்து, பாஜக கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுடனான ஆலோசனைக்கு பின்னர் லக்ஷ்மன் சவடி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

முக்கிய தலைவர்கள் விலகல் :

மேலும், கர்நாடக பாஜக முன்னாள் தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து தன்னை முழுதாக விடுவித்து கொண்டதாக அறிவித்துவிட்டார். இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்பதையும் அறிவித்து விட்டார். மேலும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பாவும் இதே போல தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.  தனக்கு சீட் வழங்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கர்நாடக தேர்தல் :

கர்நாடக சட்ட சபை தேர்தலில் மூத்த தலைவர்கள் ஒதுங்குவது அல்லது ஒதுக்கி வைத்து, புது நபர்களுக்கு வாய்ப்பு வழங்குவது பாஜகவுக்கு பின்னடைவாக அமையுமா அல்லது புதிய முயற்சி வெற்றிக்கனியை பறித்து தருமா என்பது வரும் மே மாதம் 13ஆம் தேதி தெரிந்து விடும். கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

RELATED ARTICLES