பெண்களே உங்கள் முக அழகை இயற்கையாக பராமரிக்க இதை செய்து பாருங்க

இன்றைய இளமை தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே சரும பிரச்சனைகள் தான். சரும பிரச்சனைகளை நம் எவ்வாறு மேற்கொள்வது என தெரியால், பல பக்கவிளைவுகளை விளைவிக்க கூடிய செயற்கை மருத்துவ முறைகளை கையாளுகிறோம்.

Image result for தேங்காய் பாலில்

அனால், நாம் இயற்கையான முறையை மேற்கொண்டால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. நிரந்தரமான சரும அழகையும் தருகிறது. தற்போது நாம் தேங்காய் பாலின் மூலம், சரும அலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேங்காய் பாலில் இருக்கிறது. தேங்காயில் வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன. இது முகத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

முகம் பளிச்சிட

Image result for முகம் பளிச்சிட

தேங்காயை துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின், வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பளிச்சென்று மாறி விடும்.

சருமம் மென்மையாக

தேவையானவை

  • முல்தானிமட்டி – 1 டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் –  1டீஸ்பூன்

செய்முறை

Related image

இரண்டையும் சம அளவில் எடுத்து நன்றாக கலந்து, முகத்திற்கு பேக் போல் பட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமம் மென்மையாகி, பளிச்சென்று மாறிவிடும்.

பப்பாளி

Image result for பப்பாளி

பப்பாளி இயற்க்கை நமக்கு கொடுத்த வரங்களுள் ஒன்று. கனிந்த பப்பாளியை நன்கு கூழாக்கி, சிறிது தேங்காய் பால் மற்றும் தென் கலந்து முகத்தில் பூசி வர முகம் பளபளவென வெண்மையாக மாறிவிடும்.

கரும்புள்ளி நீங்க

தேவையானவை

  • உருளைக்கிழங்கைக்கு சாறு – 1 டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் – 1 டீஸ்பூன்
  • பயிற்றம் மாவு – 1 டீஸ்பூன்

செய்முறை 

Related image

மூன்றையும் நன்கு கலந்து முகத்திற்கு பேக் போன்று பூச வேண்டும். நன்கு காய்ந்த குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கி விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment