தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறைக்குப் பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் இன்று வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு செப்டம்பர் 30ல் முடிவடைந்ததை அடுத்து, அக்.1 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த காலாண்டு விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு உள்ளன. இதில்,அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, இன்று முதல் மூன்று நாட்கள் எண்ணும், எழுத்தும் பயிற்சி நடக்கிறது. இதனால், அரசு பள்ளிகளில் மட்டும், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment