சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ராணுவ அதிகாரியாக அசதியுள்ள்ள புதிய பட டீசர் இதோ! பொங்கல் 2020 ரிலீஸ்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சரிலேறு நீக்கவாறு எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த  தலைப்புக்கு இவருக்கு நிகர் யாரும் இல்லை என அர்த்தம். இந்த படத்தை அனில் ரவிப்புடி இயக்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிராதான தயாரிப்பாளாரான தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருட பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இப்படத்தை முதலில் தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்யபடும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அப்படி எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழில் ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் தர்பார் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசாக உள்ளன. ஆதலால் இப்படம் தமிழில் டப் செய்யப்பட வாய்ப்பில்லை. ஆனால் தமிழில் தயாராகும் தர்பார், தெலுங்கிலும் டப்பாகி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்குவாரு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.