நாட்டு வெடி குண்டு வீச்சு -4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.அண்ணா மேம்பாலத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் .இதன் பின்னர் வெடிகுண்டு வெடித்த இடத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் விசாரணை மேற்கொண்டார். 

இந்நிலையில்  வெடிகுண்டு வீச்சு  தொடர்பாக கமருதீன்,பிரசாந்த்,ஜான்சன்,ராஜசேகர் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.