நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே சீருடை.! அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.! 

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை குறித்த வழக்கில், உத்தரவிட அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை குறித்து அதில் பதிவிட்டு இருந்தார்.

அதாவது, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும், அதே போல பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடையும் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, ‘ அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை என்ற வழக்கில் இந்த விவகாரம் தொடர்பாக உத்தரவிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. மேலும் இதில் விசாரிக்க ஒன்றும் இல்லை என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment