மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம்..! RITES நிறுவனத்தில் வேலை..உடனே விண்ணப்பிங்க..!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு மினி ரத்னா மத்திய பொதுத் துறை நிறுவனமான RITES நிறுவனம், ஒரு பல்துறை பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது கருத்து முதல் ஆணையிடுதல் வரை அனைத்து அம்சங்களிலும் விரிவான சேவைகளை வழங்குகிறது.

தற்பொழுது, இந்த RITES நிறுவனம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவியின் விவரம்: 

RITES நிறுவனம், பொறியியல் வல்லுநர்கள் பிரிவில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • மேற்பார்வையாளர் மற்றும் கட்டுமான மேலாளர் (Supervisor cum Construction Manager) – 2
  • வரைவாளர் (Draftsman) – 5
  • தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டு பொறியாளர் (Quality Assurance & Control Engineer) – 2
  • களத் தரக் கட்டுப்பாட்டுப் பொறியாளர் (Field Quality Control Engineer) – 62

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்தவிட்டு விண்ணப்பிக்கலாம்.

RITES job
RITES job Image Source RITES

வயது வரம்பு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் 40 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RITES job
RITES job Image Source RITES

தகுதி:

  • சிவில் இன்ஜினியரிங் அல்லது அது தொடர்பான துறையில் முழுநேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மெட்ரிகுலேஷன் மற்றும் ஐடிஐ டிரேட்ஸ்மேன்ஷிப் முடித்திருக்க வேண்டும். சிவில் இன்ஜினியரிங் உதவியாளர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.
  • சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் அல்லது அது தொடர்பான துறையில் முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • பட்டதாரி பொறியாளர் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பவர் முதலில் RITES நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு www.rites.com செல்லவேண்டும்.
  • RITES இணையதளத்தின் தொழில் பிரிவில் நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கான Online Application விருப்பத்தை தேர்வு செய்து, கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  • பின், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, கையொப்பமிட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் ஆன்லைனில் வழங்கப்பட வேண்டும்.
  • ஆவணங்களின் நகல்களை தபால்/கூரியர் மூலம் இந்த அலுவலகத்திற்கு அனுப்பக்கூடாது. RITES இணையதளத்தின் மூலமாக மட்டுமே ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும், நேர்காணலின் போது அதை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முறை:

இதற்கான நேர்காணல் ஜூலை 28 முதல் நடத்தப்படும். ஜூலை 26க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 28 அன்று நேர்காணல் நடைபெறும். மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் அட்டவணை RITES இணையதளத்தில் பதிவேற்றப்படும். நேர்காணல் நடைபெறும் இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வேலைக்கான கடிதம் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் RITES இல் சேர வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 3 ஆகும். அதனை தாண்டி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

RITES job
RITES job Image Source RITES
நேர்காணல் நடைபெறும் இடம்:

AB-435, Block-A,

Nirman Nagar,

Jaipur, Rajasthan-302019

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.