சபரிமலை :தொடர் விடுமுறையால் 15 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசல்.!

  • பள்ளிகளும் , கல்லுரிகளுக்கும்  அரையாண்டு , புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால் பக்தர்களின்  வருகை அதிகரித்துள்ளது.
  • நேற்று கணமலையிலிருந்து , நிலக்கல் பார்க்கிங் வரை வாகனங்களில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்தது  ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

சபரிமலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த மண்டல பூஜை வருகின்ற 27-ம் தேதி இரவு 10 மணி உடன்  நடை சாத்தப்படுவதால் அத்துடன் மண்டல பூஜை முடிகிறது.

இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என்பதால் நிறைவு சபரிமலையில்  ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதற்கு ஏற்றாற்போல தற்போது பள்ளிகளும் , கல்லுரிகளுக்கும்  அரையாண்டு , புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால் பக்தர்களின்  வருகை அதிகரித்துள்ளது.

இதனால் நேற்று முதல் சபரிமலையில் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். நிலக்கல் பார்க்கிங்கில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் நாராணன்தோடு பகுதியில் போலீசார் கடும் சோதனை செய்து அனுமதிக்கின்றனர்.

பரிசோதனையின் போது பக்தர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த பிறகு அனுமதிக்கின்றனர். நேற்று அதிகாலை தொடங்கிய போக்குவரத்து நெரிசல் மாலை வரை நீடித்தது. கணமலையிலிருந்து , நிலக்கல் பார்க்கிங் வரை வாகனங்களில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்தது  ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

author avatar
murugan