ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில், ரஷ்யா பொறுத்திய ராக்கெட் லாஞ்சர்கள்.!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ரஷ்யா, ராக்கெட் ஏவுகணைகளை பொறுத்தியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைன் எல்லையில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவில், உள்ள ஆறு உலைகளில் ஒன்றின் அருகே ரஷ்யப் படைகள் பல ராக்கெட் ஏவுகணைகளை(லாஞ்சர்களை) வைத்துள்ளதாக உக்ரைனின் அணுசக்தி நிறுவனமான எனர்கோட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யப்படைகள், ராக்கெட் லாஞ்சர்களை அணுமின் நிலையத்தில் வைத்து உக்ரைனுக்கு பயத்தை அதிகரிக்க செய்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் கதிர்வீச்சு அபாயத்தை அதிகரிப்பதற்காகவும் ரஷ்யா இவ்வாறு செய்துள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவுகணைகள் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) வரை தாக்குதலை ஏற்படுத்தும்.

போருக்கு பிறகு ஜபோரிஜியா பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. மேலும் அணுமின் நிலையத்தின் 6 உலைகளும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதால் பெரிய ஆபத்து ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது. எனினும் கதிர்வீச்சு அபாயம் எந்த நேரத்திலும் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment