முரட்டுத்தனமான ஸ்டைல்…அசத்தலான வடிவமைப்பு..! வெளியானது ‘ஹிமாலயன் 450’ 3டி மாடல்..!

நாளுக்கு நாள் தொழிநுட்பமானது வளர்ச்சியடைந்து வரும் நமது உலகில், ஸ்மார்ட்போனை போல பைக் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அத்தகைய பைக் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதிலும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பைக் தான் ராயல் என்ஃபீல்டு.

Royal Enfield
Royal Enfield Image Source Twitterthegirlfromrock

அந்தவகையில், இரு சக்கர வாகன உலகில் முன்னணி வகிக்கும் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 3டி மாடலின் (Himalayan 450 3D) புதிய வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த 3டி மாடல் ராயல் என்பீல்ட் ஹிமாலயன் 450 எப்படி இருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்யக்கூடிய அளவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

ஹிமாலயன் 450 என்பது உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சாகச பைக். இந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மிகவும் எளிமையான மற்றும் முரட்டுத்தனமான மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த ஹிமாலயன் 450-ன் தயாரிப்பு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால், பைக்கின் 3டி மாடல் தற்பொழுது கருப்பு நிறத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததாக கூறப்படுகிறது.

Royal Enfield Himalayan 450
Royal Enfield Himalayan 450 Image Source YoutubeTrippleLines

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் டார்க்(torque):

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் டார்க் ஆனது 4000 ஆர்பிஎம்மில் 27 என்எம் ஆகும். இதைவிட, ஹிமாலயன் 450 அதிகப்படியான டார்க்கை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த டார்க் ஆனது ஆஃப்-ரோடிங் மற்றும் சாகச பயணங்களுக்கு ஹிமாலயன் பைக்கை சிறந்த தேர்வாகமாற்றுகிறது. இதனால் ஹிமாலயன் எந்த நிலப்பரப்பையும் அல்லது சூழ்நிலையையும் எளிதாகக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது.

Royal Enfield Himalayan 450
Royal Enfield Himalayan 450 Image Source YoutubeTrippleLines

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் எஞ்சின்(Engine):

ஹிமாலயனில் 35 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 450 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிமாலயன் 450 ஆனது 21 இன்ச் முன் மற்றும் 17 இன்ச் பின் சக்கர அமைப்பைப் கொண்டுள்ளது. மேலும், ராயல் என்ஃபீல்டு, டியூப்லெஸ் டயருடன் கூடிய ஸ்போக் வீலுடன் வரலாம்.

Royal Enfield Himalayan 450
Royal Enfield Himalayan 450 Image Source YoutubeTrippleLines

விலை மற்றும் அறிமுகம்:

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியானால் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2,60,000 முதல் ரூ.2,70,000 வரை இருக்கலாம். இந்த பைக் Hero Xpulse 440 க்கு போட்டியாக இருக்கும். சாகச பயணம் ஆர்வமுள்ள அனைவரும் இந்த பைக்கை வாங்கலாம். இது முழு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.