புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 அறிவிப்பு…! – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட  குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில், மீனவ குடும்பங்களின் வாஅவாதாரம் பாதிக்கப்படாதவண்ணம் இருக்க, அவர்களுக்கு நிவாரண தொகை வாழங்கப்படுவதுண்டு.

அந்த வகையில், புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், 15,83 மீனவ குடும்பங்களுக்கு ரூ.8.75 கோடி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல தமிழகத்திலும், மீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரண தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.